குழந்தை பாக்கியம் தரும் ஏகாதசி விரதம் இன்று

0

ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்துக்கும் ஒரு பலன் உண்டு. அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) ஏகாதசி விரதம் குழந்தை பாக்கியம் தரும் மகத்துவம் உள்ளதாகும்.

இதன் பின்னணியில் புராண நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு பணக்காரர் தனது குறையை முனிவர் ஒருவரிடம் தெரிவித்து, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்’ என்று கேட்டாராம். அதற்கு அந்த முனிவர், ‘கடந்த ஜென்மத்தில் தாகத்தோடு வந்த பசுவையும், கன்றையும் நீ அடித்து விரட்டிவிட்டாய். அதனால்தான் குழந்தை பாக்கியம் இல்லை. இந்தமாத வளர்பிறை ஏகாதசியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’ என்றார். அதன்படி அந்த பணக்காரர் ஏகாதசி விரதம் கடை பிடித்து குழந்தை பாக்கியத்தை பெற்றார்.

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் நாளை ஏகாதசி விரதத்தை கடைபிடித்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். இன்று இந்த விரதத்தை மேம்படுத்த வயதானவர்களுக்கு தானங்கள் செய்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here