குழந்தையை இழந்த நிலையில் சதமடித்து அசத்திய வீரர்..!

0

கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் ரஞ்சி கோப்பை போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் பெங்கால் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்குவதற்காக கட்டாக்கில் தங்கியிருந்த விஷ்ணு சோலங்கி, அவருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக பெப்ரவரி 11 ஆம் திகதி தகவல் கிடைத்தது.

ஆனால் அந்த குழந்தை 24 மணிநேரத்திலேயே இறந்துள்ளது.

பெங்காலுக்கு எதிரான முதல் போட்டியில் இருந்து வெளியேறி தனது மகளின் இறப்பு நிகழ்விற்கு விஷ்ணு சோலங்கி சென்றுள்ளார்.

இந்நிலையில் மகள் இறந்த சில தினங்களிலேயே மீண்டும் பரோடா அணியின் இரண்டாவது போட்டியில் களமிறங்கிய விஷ்ணு சோலங்கி சதம் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சண்டிகர் அணிக்கு எதிரான இந்த போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் இறுதியில் 387/7 என்ற ரன்களுடன் பரோடா அணிஅ இருந்தது

அதில் விஷ்ணு சோலங்கி 103 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here