உக்ரைன் மீது 41வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில் உக்ரைனின் Mykolaiv நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
ரஷ்யா தாக்குதல் நடத்திய வீடியோவை Mykolaiv கவர்னர் விட்டலி கிம் வெளியிட்டுள்ளார்.
மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் திடீரென ஒரு குண்டு விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
மேலும் உக்ரைனில் உள்ள புச்சா நகரில் பொதுமக்களை கொன்று குவித்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீது புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தயாராகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.