குழந்தைகளை பயமுறுத்த 119க்கு அழைப்பேற்படுத்தும் இலங்கை மக்கள்!

0

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு நாளொன்றுக்கு 1,800க்கு மேற்பட்ட அழைப்புகள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பல விநோத அழைப்புகளும் வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன, தெரிவித்தார்.

இதற்கமைய, தமது குழந்தைகளுக்குப் பயமுறுத்தி உணவை ஊட்டுவதற்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்புகள் வருவதாகவும் தெரிவித்த அவர், வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டதாக கூறியும் 119க்கு அழைப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, இவ்வாறான அழைப்புகளை முன்னெடுக்காமல். அவசரமான விடயங்களுக்கு மாத்திரம் 119ஐ அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here