குழந்தைகளை அனாதையாக்கிய கொரோனா…. பிரித்தானியாவில் புதிய ஆய்வு

0

உலகளவில் கொரோனா தொற்றானது பல இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் பல்லாயிறக்கணக்கான குழந்தைகள் அனாதையாவதற்கு கொரோனா தொற்றானது முக்கிய பங்கை வகித்துள்ளது.

கொரோனாவால் பிரித்தானியாவில் 12,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதையாகிவிட்டனர்.

தன்னை கவனித்து வந்தவர்களில் ஒருவரை இழந்துவிட்டனர் என புதிய ஆய்வு கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் அல்லது பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்தவர்கள் என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அமெரிக்க நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையங்கள் (சி.டி.சி), இம்பீரியல் கல்லூரி லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சர்வதேச ஆய்வாளர்கள் குழு, 21 நாடுகளின் தரவைப் பயன்படுத்தி இந்த மைல்கல் அறிக்கையைத் தொகுத்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் ஏற்பட்ட ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையில் 77 சதவிதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 21 நாடுகளில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான 14 மாதங்களில் தொற்றுநோயின் நேரடி விளைவாக அந்த நாடுகளில் சுமார் 1.5 மில்லியன் குழந்தைகள் பெற்றோர், தாத்தா, அல்லது பராமரிப்பாளரை இழந்துவிட்டதாக ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here