குழந்தைகளை அடிப்பது சட்டவிரோதமானது.. பெற்றோர்களே அவதானம்…

0

வேல்ஸில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிப்பது சட்டவிரோதமானது.

இன்று திங்கட்கிழமை 21 ஆம் திகதி மார்ச் மாதம் முதல் அமுலாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு இது ஒரு வரலாற்று நாள் என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வேல்ஸ் உடல் தண்டனையை தடை செய்யும் இரண்டாவது பிரித்தானிய நாடாக விளங்குகின்றது.

தங்கள் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை யாரேனும் அடித்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்காக வழக்குத் தொடரப்படும்.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஸ்கொட்லாந்து சட்டவிரோதமான முதல் பிரித்தானிய நாடாக மாறுவதற்கு முன்பு, ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தீவுகளின் முதல் பகுதியாக ஜெர்சி இருந்தது.

1979ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனையை தடை செய்த உலகின் முதல் நாடாக சுவீடன் காணப்படுகின்றது.

இப்போது உலகம் முழுவதும் 63 நாடுகளில் இது சட்டவிரோதமானது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here