கடந்த 2 ஆண்டுகளாக சீனாவின் வூகாண் மாகாணத்தில் தோன்றிய கொரோனாவிலிருந்து இன்னும் மீள முடியாமல் உள்ளது.
இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை வைரஸ் தென் ஆப்ரிக்கா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு Omicron என்று உலக சுகாதாரத்துறை பெயரிட்டுள்ளது.
இதுவரை இந்த வைரஸ் 38 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா சுகாதாரத்துறை அமைச்சர் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் தென் ஆப்பிரிக்காவில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு Omicron அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை.
முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு ஒமைக்ரான் கொரோனா திரிபு அதிக அளவில் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிக்கப்படவில்லை .
ஆனால் தற்போது அதிக அளவிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.