குழந்தைகளை அச்சுறுத்தும் புதிய வகை தொற்று! பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் ஒருவகை தொற்று நோய் பரவி வருவதாக சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

Hand, foot and mouth disease என அறியப்படும் இந்த நோய், 6 மாதம் முதல் 5 வயது சிறுவர்களுக்கு ஏற்படக்கூடக்கூடியது.

காய்ச்சல், உடல் வலி, கைகள், கால்கள் மற்றும் வாயில் சிவப்பு புள்ளிகள் ஏற்படல் போன்ற நோயின் ஆரம்ப அறிகுறிகளாக காணப்படுகின்றது.

இது ஒரு பிள்ளையிடம் இருந்து மற்றுமொரு பிள்ளைக்கு தொற்ற கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானமான இருக்குமாறும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here