குழந்தைகளின் தலையை துண்டித்து கொலை செய்யும் கொடூரம்….

0

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மொசாம்பிக்கில் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஐ.எஸ் போராளிகள் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர்.

Save the Children அமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

மொசாம்பிக்கின் வடக்கு மாகாணமான கபோ டெல்கழடோவிலே இக்கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

2017ல் இஸ்லாமிய கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து 2,500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

7,00,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். போராளிகள் ஐ.எஸ் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாணத்தை விட்டு இடம்பெயர்ந்த குடும்பங்கள் இந்த கொடூர சம்பவங்களை பகிர்ந்ததாக Save the Children அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here