குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு

0

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 21 இலட்சம் குடும்பங்களுக்கு இந்நிவாரண நிதியை வழங்கும் நடவடிக்கை இவ்வாரம் முதல் முன்னெக்கப்படும் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்படுத்தியுள்ளது.

இதன் போது சுமார் 50 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

புதுவருட கொவிட் கொத்தணி பரவல் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் சமுர்த்தி பயனாளர்கள் தவிர்ந்த குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட தரப்படுத்தலின் பிரகாரம் சுமார் 21 இலட்சம் குடும்பங்கள் இந்நிதியை பெற தகுதி பெற்றுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here