குறித்த சாபமே சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியதன் காரணம்..!

0

சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி பயணித்த சரக்கு கப்பல் ஒன்று, எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் கடந்த வாரம் சிக்கிக்கொண்டது.

இதன் காரணமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட கப்பல்கள் தொடர்ந்து பயணிக்க முடியாமல் சிக்கிக்கொண்டன.

இந்நிலையில், சூயஸ் கால்வாய் உள்பட எகிப்தில் அண்மையில் நடைபெற்று வரும் பிரச்சினைகளுக்கு பார்வோன்களின் சாபம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அதாவது, எகிப்து தலைநகர் கெய்ரோவின் தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கும் மம்மிக்களை வேறு இடத்துக்கு மாற்ற எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது.

இது பார்வோன்களுக்கு பிடிக்கவில்லை எனவும், அவர்களின் சாபத்தால் சூயஸ் கால்வாய் முடங்கியதாக இணையத்தில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 22 பேர் உயிரிழந்தனர்.

கெய்ரோவில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு எல்லாம் அந்த சாபம் காரணம் என தெரியவந்துள்ளது.

ஆனால், தொல்லியல் துறை வல்லுனர்களோ, பார்வோன்களின் வரலாற்றுக்கு ஏற்ற பகுதிக்கு மம்மிக்கள் இடம் மாற்றப்படுவதால் அவர்களுக்கு மகிழ்ச்சியும், மரியாதையும்தான் கூடுமே தவிர சாபம் ஏற்படாது என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here