குரு பூர்ணிமா நாளில் நந்தீஸ்வரர் வழிபாட்டு பலன்கள் !!

0

பொதுவாக வியாழக்கிழமை அன்று பவுர்ணமி திதி வந்தால் அந்த நாளை குரு பூர்ணிமா என்போம். அதிலும் இந்த முறை மூலம் நட்சத்திரமும் கூடி வந்து இருக்கிறது.

மூலாதார முன்டெழம் கனலை காலால் எழுப்பி என்கிறார் அவ்வையார். வேட்கை விட்டார் நெஞ்சில் மூடத்தே இருந்து முக்தி தந்தானே என்கிறார் திருமூலர். அதாவது புருவமத்தியை மேல் மூலம் என்பர். மேல் மூலத்தே திரை குற்றம் இருக்கிறது. அது நீங்கினால் திரு மூலநாதரை தரிசிக்கலாம். நடராசரை தரிசிக்கலாம்

சிதம்பரம் தரிசனம் கிடைக்கும். இந்த மேல் மூலம் திரை குற்றம் ஆனது அவ்வளவு சீக்கிரத்தில் நீங்குவது இல்லை. அது நீங்க வேண்டும் என்றால் அந்த நந்தீஸ்வரர் அருள் வேண்டும்.

தொட்டு காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வராது என்பர். ஒரு குருவின் அருளால் தான் அந்த திரை குற்றம் இருந்தும் கூட சிதம்பரத்தை கானும் பாக்கியம் கிடைக்கும்.

பொதுவாக மேல் மூலம் திரை குற்றம் நீக்குவதற்கு பிராயத்தனம் படவேண்டும். அதாவது அதற்கு என்றே விரதம், தவம், யோக சாதனம் எல்லாம் செய்யவேண்டும். அப்படி செய்து வந்தால் இந்த மூலம் நட்சத்திரம் மற்றும் வியாழக்கிழமை பவுர்ணமி திதி மூன்றும் கூடி வரும் நாளில் நந்தீஸ்வரர் அருளால் திரை குற்றம் நீங்க பெரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here