குருநகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குடும்பமொன்று பொலிஸாரினால் கைது

0

யாழ்ப்பாணம்- குருநகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குடும்பமொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து, யாழ்ப்பாணம்- குருநகரில் பதுங்கிருந்த 4பேர் கொண்ட குடும்பமொன்றினை கைது செய்த பொலிஸார், அவர்களை சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய தனிமைப்படுத்தியுள்ளனர்.

தமிழகம்- ஈரோடு மாவட்டம், அரிச்சலூர் இடைத்தங்கல் முகாமில் வசித்து வந்த வயோதிபப் பெண், அவருடைய பிள்ளை, அவரது இரு பேரக்குழந்தைகள் ஆகியோரே சட்டவிரோத கடற்பயணம் ஊடாக நாட்டுக்குள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை அவர்களிடம் தற்போது பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன் அவற்றின் முடிவுகள் வெளியானதன் பின்னரே மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here