30 நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை (Monkeypox) தொற்று பரவியுள்ளது.
குரங்கம்மை (Monkeypox) பெயரை மறுபெயரிட உலக சுகாதார நிறுவனம் (WHO) முடிவு செய்துள்ளது.
வைரஸின் பெயர் பாகுபாடு காட்டும் வகையில் இருப்பதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு எழுப்பப்பட்ட கவலைகளுக்குப் பின் இந்த முடிவு செய்யப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 1,600-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்புகள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பாதிப்புகள் உலகம் முழுவதும் பதிவாகியுள்ளன.
Monkeypox வைரஸின் புதிய பெயர் குறித்த அறிவிப்புகளை WHO விரைவில் வெளியிடும் என்று நிருவத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
ஜூன் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட “குரங்கம்மை வைரஸுக்கு பாரபட்சமற்ற மற்றும் களங்கமற்ற பெயரிடல் அவசரத் தேவை” என்ற கட்டுரை, பெயரை மாற்ற 30 சர்வதேச விஞ்ஞானிகளிடமிருந்து கோரிக்கையை முன்வைத்தது.