கனடாவின் ரொறன்றோவில், குப்பைத் தொட்டியில் கறுப்பினச் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் வயது நான்கு முதல் ஏழு வயது இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ரொறொன்ரோவின் ரோஸ்டேல் பகுதியில் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது கொலையா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
சிறுமி இறந்து ஒரு வருடம் இருக்கலாம் என்றும், உடலில் சிதைவு நிலையின்படி அவர் கடந்த கோடையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி ஆப்பிரிக்க அல்லது கலப்பு ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர், மூன்றரை அடி உயரம் இருந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 28 ஆம் திகதி மற்றும் மே 2 ஆம் திகதிக்கு இடையில் ஒரு கட்டுமான தளத்திற்கு அருகிலுள்ள குப்பைத்தொட்டியில் சடலம் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த இடம் நெடுஞ்சாலைக்கு அருகில் மற்றும் அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகில் உள்ளது.
குப்பைத்தொட்டியை நேரடியாக எதிர்கொள்ளும் கேமராக்கள் எதுவும் இல்லாத போதிலும், அப்பகுதியில் கிடைக்கும் அனைத்து சிசிடிவி வீடியோ காட்சிகளையும் பொலிஸார் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரொறன்ரோ மேயர் ஜான் டோரி இது “சொல்ல முடியாத சோகம்” என்று விமர்சித்துள்ளார்.
குழந்தைகள் தானாக இறந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தச் சிறுமியின் அடையாளத்தை நிறுவுவதே இப்போது எங்களின் முதல் முன்னுரிமை.
புலனாய்வாளர்கள் சிறு ஆதாரத்தையும் விட்டுவிட மாட்டார்கள் என்று காவல்துறை ஆய்வாளர் ஹாங்க் இட்சிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

