குடும்ப தகராறு காரணமாக மனைவியின் விபரீத செயல்..!

0

இலங்கையில் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் தனக்குத்தானே மண்ணெண்ணெய் உற்றி தீயிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இநநிலையில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை 7 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இசை நடனக்கல்லூரி வீதி முதலாம் குறுக்கு வீதியிலுள்ள 27 வயதுடைய இளம் குடும்ப பெண்ணுக்கும் கணவருக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறையடுத்து குறித்த பெண் தனக்குத் தானே மண்ணெண்ணெய் உற்றி தீ வைத்துக்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார்

இதனையடுத்து உடனடியாக அவரை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here