குடி போதையால் இளைஞருக்கு நேர்ந்த கதி…!

0

இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில், இந்தூரில் உள்ள பங்கங்கா பகுதியில் சென்ற வியாழன் இரவு ஹோலி கொண்டாட்டத்தின் போது 38 வயது நபர் ஒருவர் தவறுதலாக தன்னைத்தானே மார்பில் கத்தியால் குத்திக் கொண்டார்.

கோபால் சோலங்கி (Gopal Solanki) கையில் கத்தியுடன் தனது நண்பர்களுடன் நடனமாடிக்கொண்டிருந்துள்ளார்.

அவர் ஸ்டண்ட் செய்ய முயன்றபோது தவறுதலாக தன்னைத்தானே குத்திக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அதிக அளவில் குடிபோதையில் இருக்கும் கோபால் கத்தியால் நான்கு முறை குத்திக்கொண்டுள்ளார்.

சோலங்கியின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவரை ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here