இந்தியாவின் தமிழகத்தில் சேலத்தின் காடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், இவரது மனைவி சரண்யா.
இவருக்கு பிரித்தி, ஹரினி என்ற பெண் குழந்தைகளும், குகன் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சரண்யா திடீரென இறந்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த குடும்பத்தினர் சரண்யாவின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
மேலும் சரண்யாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தீவப்பட்டி கெபலிஸ் நிலையத்தில் அவரது தாய் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடிய அவரது கணவர் லட்சுமணனை தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சரண்யா பள்ளியில் படிக்கும்போது லட்சுமணன் காதலித்து திருமணம் செய்து கொண்டதும், இருவரும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று, தனக்கு வாங்கி வந்த மதுவை குடித்துவிட்டு சரண்யா சண்டையிட்டுள்ளார்.
அதனால் கோபத்தில் அடித்து கொன்றதாக லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து லட்சுமணனை தீவட்டிப்பட்டி காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.