கிழக்கு கடற்கரையில் கரையொதுங்கும் கடல் ஆமைகளும் டொல்பினும்….

0

இலங்கையின் கிழக்கு கடற்கரையில் மேலும் சில கடல் ஆமைகளும், டொல்பின் ஒன்றும் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

அம்பாறை – பெரிய நீலாவணை – பாண்டிருப்பு கடற்கரை பகுதியில், உயிரிழந்த 3 கடல் ஆமைகளின் உடல்கள் நேற்று கரையொதுங்கியுள்ளன.

இதேவேளை திருக்கோவில் – தம்பட்டை கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்றினதும், டொல்பின் ஒன்றினதும் உடல்கள் கரையொதுங்கியுள்ளன.

அத்துடன் உமிரி கடற்கரை பகுதியிலும், இறந்த கடல் ஆமையின் உடல் கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறு கரையொதுங்கிய டொல்பின் மற்றும் கடல் ஆமைகளின் உடல்களை, உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த மேலும் சில கடல் ஆமைகள் மற்றும் டொல்பின்கள் கடலில் மிதப்பதாக, கடல் தொழிலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here