கிளி மீது புகார் அளித்த முதியவர்….. வியப்பு சம்பவம்…

0

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஷிவாஜி பகுதியைச் சேர்ந்த 72 வயது சுரேஷ் ஷிண்டே

சுரேஷ் ஷிண்டேவின் அயல் வீட்டைச் சேர்ந்த அக்பர் அம்ஜத் கான் வீட்டில் வளர்த்த கிளி மீது சுரேஷ் ஷிண்டே புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், அந்தக் கிளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுரேஷ் ஷிண்டே, பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் ஷிண்டே தெரிவிக்கையில்,

கிளியின் அலறல் சத்தம் தனக்குத் தொந்தரவாக உள்ளது என அக்பர் அம்ஜத்கானுக்கு கூறியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிளி மீதும் அவர் மீதும் பொலிஸில் புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து சட்டவிதிகள் படி கிளியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here