கிளிநொச்சி பாடசாலை வாசலில் பரிதாபகரமாக உயிரிழந்த மாணவி!

0

கிளிநொச்சி, மத்திய கல்லூரி முன்பாக இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததோடு, மேலும் ஒரு மாணவி படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த 17 வயதுடைய திருவாசம் மதுசாளினி எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்தார்.

ஊற்றுப்புலத்தில் கல்விகற்ற மாணவர்களில் உயர் தரத்திற்கு தேர்வான மாணவர்கள் சிலர் பேரூந்தில் பயணித்து மத்திய கல்லூரிக்கு புதிய அனுமதிக்காக சென்றுள்ளனர்.

குறித்த மாணவிகள், பாதையின் எதிர்த்திசைக்கு மாறுவதற்காக பாதசாரிக் கடவையை கடக்கின்றபோது, வீதியால் பயணித்த கன்டர் வண்டி வேகத்தை நிறுத்திபோதும், அதன் பின்னே வந்த இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று கன்டர் மீது மோதியதால் கன்டர் நகர்ந்து, வீதியை கடந்த மாணவர்கள் மீது மோதியுள்ளது.

இதன்போது, இரு மாணவிகள் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், ஒரு மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தை கண்டித்தும் இறந்த மாணவிக்கு நீதி வேண்டியும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் இருப்பதற்காக மாபெரும் கண்டன போராட்டம் இன்று மதியம் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here