கிளிநொச்சியில் 4 பிள்ளைகளின் தந்தை அடித்து கொலை

0

கிளிநொச்சி- சிவபுரத்தில் குடும்பஸ்தர் அடித்து கொல்லப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சிவபுரத்தினைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் ( 42 வயது) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

சித்திரை புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி இரவு 9 மணியளவில், குறித்த பகுதியில் இருவர் முரண்பட்டு கொண்டு இருந்துள்ளனர்.

இதன்போது அவ்வழியாக சென்ற குறித்த நபர், முரண்பட்டுக்கொண்டிருந்த அவரது உறவினரிடம் பிரச்சினை குறித்து வினவியுள்ளார்.

இதன்போது மற்றையவர், குறித்த நபர் மீது கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது தாக்குதலுக்கு இலக்கான அவரை, ஏனையோர் உடனடியாக கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனளிக்காது என வைத்தியர்கள் தெரிவித்ததும் மீண்டும் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கானவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனையை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here