கிளிநொச்சியில் தாயும் மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு

0

கிளிநொச்சி, புன்னைநீராவி பகுதியில் தீயில் எரிந்த நிலையில் தாயும், மகளும் சடலங்களாக மீட்க்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (ஜன-20) நள்ளிரவு 11.50 மணியலவில் தாயும் தனது 17 வயது மகளும் தீயில் எரிந்து உருக்குளைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த தருமபுரம் பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச் சம்பவம் நடைபெற்றபொழுது தந்தையும், மகனும் குடும்ப சுமைகாரணமாக கூலி வேலைக்கு வெளி மாவட்டத்திற்கு சென்ற சமையமே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் நடைபெற்றுள்ளது இது தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என பொலிசார் தீவிர விசாரனைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இறந்தவர் 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி 07 பிள்ளைகளின் தாயாரும், அவரது மகள் 17 வயதுடைய லக்சிகா இவர்களே இறந்தவர்கள் ஆவார்கள்.

மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here