கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்த இளம் தாய் பரிதாபமாக மரணம்

0

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் மறுநாள் உயிரிழந்துள்ளார்.

மூச்சு திணறல் காரணமாக யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட அவர் இன்றய தினம் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்த்துள்ளனர்.

குழந்தை பிறந்து ஒரு நாள் என்றும் மறுநாள் மூச்சு திணறல் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

தர்மபுரம் கிளிநொச்சியினை சேர்ந்த 27 வயதான இவர் தனது பிரசவத்திற்காக யாழ் போதனா மருத்துவமனை சென்றுள்ளார்.

அங்கு குழந்தையினை பிரசவித்த நிலையில் அஜந்தன் துஸ்யந்தினி என்ற ஒரு குழந்தையின் இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்,

பிறந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதும் என்றும் தெரியப்படுகின்றது. இவருடன் சம்பந்தப்பட்ட ஏனையவர்களை தனிமை படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here