கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தள்ளிப் போன வலிமை?

0

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு தள்ளி வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கோ அதற்கு முன்போ இந்த படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்கவும், போனி கபூர் தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்தின் அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் முடிந்துள்ள நிலையில் அக்டோபர் மாதமே அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம். இந்நிலையில் வலிமை படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்ட ஹெச் வினோத் இப்போது அடுத்த படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளை தொடங்கி விட்டதாம்.

இந்நிலையில் தீபாவளி ரிலீஸுக்கு தயாரான வலிமை படம் இப்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். தீபாவளிக்கு அண்ணாத்த வருவதால் அதோடு மோத வேண்டாம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here