கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்து இளைஞன் கைது!

0

வவுனியா உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து முஸ்லீம் இளைஞனொருவன் நேற்று(புதன்கிழமை) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக தற்போது காணப்படும் நிலையில் நேற்றைய தினம் குறித்த ஆலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனொருவர் தேவாலயத்தினுள் சென்றுள்ளார்.

அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை விசாரித்தபோது 25 வயதுடைய கண்டி அக்குரனை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லீம் இளைஞன் என தெரியவந்துள்ளது.

உடனடியாக அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here