கிருமி தொற்று நீக்கியை அருந்திய 3 பேர் பலி!

0

இந்தியாவின் மத்திய பிரதேசம் பகுதியில் உடன் பிறந்த மூன்று சகோதரர்கள் போதைக்காக கிருமி தொற்று நீக்கியை அருந்தி உயிரிழந்துள்ளனர்.

மேற்குறிப்பிடப்பட்ட மூன்று சகோதரர்களும் குடிபோதைக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக இவர்கள் வசித்து வந்த பகுதியில் மதுகடைகள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சகோதரர்கள் மூவரும் போதைக்காக கிருமி தொற்று நீக்கியை அருந்தியுள்ளனர்.

இந்த மூன்று பேரும் மொத்தமாக 5 லீற்றர் கிருமி தொற்று நீக்கியை அருந்தியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து இவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

மயக்கமடைந்த இவர்களை வைத்தியசாலையில் அனுமதித்த போது மூவரும் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here