கிருத்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமான் வழிபாட்டு பலன்கள் !!

0

முருகனுக்கு உகந்த நட்சத்திர விரதம் கிருத்திகை. ஞானகுருவான முருகப் பெருமானை விரதம் இருந்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். நோய்கள் நீங்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும்.

கார்த்திகை விரதம் இருக்க நினைப்பவர்கள் ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப் பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். முருகனுக்குப் பிடித்த சிவப்பு நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் சிவப்பு நிற கனிகளை வைத்து தீபாராதனை செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி வாழ்க்கை சீராகும். அதோடு எதிர்பாராத அளவு புகழும், சக்தியும், நல்ல மங்கல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதே போல் உள்ளத்தில் நம்பிக்கை அதிகரிக்கும்.

விரதத்தை தொடங்கும் போது முருகனின் அண்ணனும், முழுமுதல் கடவுளான விநாயகரை வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும். முருகனின் வேலை வணங்குவதே என் வேலை என வீட்டில் வேல் வைத்து வழிபடுவது நல்லது. வீட்டு பூஜை அறையில் வேல் வைத்து அதன் இரு புறமும் அகல்விளக்கு தீபம் ஏற்றி வணங்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here