கிரீஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு …..

0

கிரீஸில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசியைக் கட்டாயமாக்க வேண்டுமென அரசு முடிவெடுத்துள்ளது.

கொவிட் தடுப்பூசியை மறுப்பவர்களுக்கு மாதம் 100 யூரோ அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த நிதி கிரீஸ் சுகாதார அமைப்பின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

கிரீஸ் மக்கள் தொகையில் சுமார் 63 சதவீதம் பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்ட 520,000 பேருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்று புள்ளிவிவரங்கள் வெளிகாட்டுகின்றது.

அதன்படி, இதுவரை முதல் தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஜனவரி 16ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here