கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சிங்ரூ அவென்யூ பகுதியிலே இந்த வெடி விபத்து சம்பவம் நடந்தள்ளது.
வெடி விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீயினால் ஒருவர் காயமடைந்துள்ளார் மற்றும் அப்பகுதியில் பல கட்டிடங்கள் பெருமளவில் சேதடைந்துள்ளன.
ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க குறைந்தது 18 தீயணைப்பு வீரர்கள் ஏழு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது.
பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
வெடிப்பு அல்லது தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.