கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகி பாபு

0

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது நடிகர் யோகிபாபு அரண்மனை-3, கடைசி விவசாயி, டிக்கிலோனா உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.https://twitter.com/iYogiBabu/status/1405607618161246208

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here