கிரிக்கெட் போட்டியில் திடீரென ஏற்பட்ட பூகம்பம்…. குலுங்கிய மைதானம்!

0

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு போட்டியில் டிரின்டாட் பகுதியில் குயின்ஸ் பார்க் மைதானத்தில் ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியின் போது ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

அப்போது ஆட்டத்தின் 11வது ஓவரில் வீரர்கள் விளையாடி கொண்டிருந்த போது, கேமராக்கள் திடீரென்று ஆடியுள்ளது.

கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு இருந்த ஆண்டிரூ லேனார்ட், பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நிலநடுக்கம் சுமார் 15 முதல் 20 விநாடிகள் வரை நீடித்தது. ரிக்டர் அளவு கோளில் 5.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணராத கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here