கிரிக்கெட் தொடரில் இருந்து விலகும் தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர்!

0

இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இடம்பெறுகின்றது.

முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 18 ஆம் திகதி நடக்கிறது.

நேற்று முன்தினம் ஹராரே சென்றடைந்த இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார்.

ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக விலகி உள்ளார்.

மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் களமிறங்கும் போது வாஷிங்டன் சுந்தர் இடது தோளில் பலமாக காயம் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here