கிரிக்கெட் ஜாம்பவான் அன்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி

0

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான அண்ட்ரூ சைமண்ட்ஸ் மகிழுந்து விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அவர் தனது 46ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு இரவு 11 மணியளவில் டவுன்ஸ்வில்லி நகரில் ஆலிஸ் நதி பாலம் அருகே அவரது மகிழுந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் பலத்த காயங்களுக்குள்ளான அண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

சைமண்ட்ஸின் குடும்பத்தினரும், அவரது உயிரிழப்பை உறுதிப்படுத்தினர்.

சைமண்ட்ஸ், அவுஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 198 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 14 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

‘ரோய்’ என அழைக்கப்படும் அண்ட்ரூ சைமண்ட்ஸ், அவுஸ்திரேலிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகலதுறை ஆட்டகாரர்களில் ஒருவராவார்.

அத்துடன் 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அணி உலக கிண்ணங்களை கைப்பற்றுவதற்கு அவரது பங்கு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் அவரது இழப்புக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட தரப்பினர் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.

அத்துடன் இரசிகர்களின் விருப்பமானவராக பரவலாகக் கருதப்பட்டுவரும் ஒருவருமாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here