கியூபெக்கின் பிரெஞ்சு மொழிச் சட்டத்திற்கு எதிர்க்கும் மக்கள்…

0

கியூபெக் மாகாணத்தில் பிரெஞ்சு மொழிச் சட்டத் திருத்தங்களுக்கு மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

பில் 96 எனப்படும் பிரெஞ்சு மொழி திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு மொன்றியலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆங்கில மொழி பேசும் நபர்கள் நேற்றைய தினம் இந்தப் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

ஆங்கில மொழி பேசும் சமூகத்தின் உரிமைகளை உதாசீனம் செய்ய அனுமதிக்கப்பட முடியாது என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரெஞ்சு மொழி பாதுகாக்கப்படுவதனையும் மேம்படுத்தப்படுவதனையும் தாம் எதிர்க்கவில்லை என்ற போதிலும் அது ஆங்கில மொழி பேசுவோரின் உரிமைகளை நசுக்கும் வகையிலானதாக அமைந்து விடக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பிரெஞ்சு மொழிக் கொள்ளையானது பழங்குடியின மக்களின் உரிமைகளையும் ஒடுக்கும் என மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here