கிம் ஜாங் உன்னின் தலையில் காணப்பட்ட பேண்ட் எய்ட்… கிளம்பியது அடுத்த சர்ச்சை!

0

சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் கிம் தோன்றினார்.

உலக நாடுகளில் அரசியல் விவகாரங்களில் தொடர்ந்து மர்மமாகவே செயல்பட்டு வரும் நாடாகவே வடகொரியா இருந்து வருகிறது. சமீபத்தில்தான் தங்கள் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதையே வடகொரியா வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. அதுபோல வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் உடல்நலம் குறித்தும் தொடர்ந்து சர்ச்சைகளே நிலவி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் இறந்துவிட்டடதாக உலக அளவில் பரபரப்பு எழுந்தபோது கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு தன் இருப்பை உறுதி செய்தார். பின்னர் மீண்டும் கிம் ஜாங் அன் தலைகாட்டாமல் இருந்து வந்த நிலையில் அவர் தீவிர உடல்நல குறைவில் இருப்பதாக பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் அரசு தொலைகாட்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவரது தலையின் பின்பக்கம் பேண்டேஜ் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது சம்மந்தமாக பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here