கிணற்றில் வீழ்ந்து தம்பதியினர் உயிரிழப்பு- மல்லாவியில் சோகம்

0

கிணற்றில் வீழ்ந்து கணவனும் மனைவியும் உயிரிழந்த சம்பவமானது முல்லைத்தீவு-மல்லாவி அனிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த றஞ்சன் பிரதீபன் (31) பிரதீபன் மாலினி (27) என்பவர்களே உயிரிழந்தவர்களாவார்.

குறித்த இருவரும் திருமணத்திற்கு முன்னர் பேக்கரி பொருட்கள் உற்பத்தி செய்யும் இடமொன்றில் பணியாற்றிவந்த நிலையில், காதலித்து திருமணம் முடிந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here