கால்வாயில் மூழ்கிய வேன்…. 11 பேருக்கு நேர்ந்த கதி

0

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் குடும்பம் ஒன்று அவர்களது உறவினர்களை சந்திப்பதற்காக சென்று வேன் ஒன்றில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

ஆனால் அவர்கள் பயணித்த வேன் பஞ்சாப் மாகாணத்தின் ஷேகுபுரா மாவட்டத்தில் கான்குவா டோக்ரான் பகுதியில் பயணித்த போது, மியான்வாலி கால்வாயில் கவிழ்ந்துள்ளது.

குறித்த விபத்தில் வேன் நீரில் மூழ்கியதால், 7 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் என மொத்தம் 11 பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்திற்கான காரணம் அதிகவேகமாக பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here