கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம்…. அதிர்ச்சியடைந்த இளம் தந்தை

0

பிரித்தானியாவின் வால்சால் பகுதியில் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் காணப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடியில் இருந்து குடியிருப்புக்கு திரும்பும் வழியில் வால்சால் பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் அந்த அதிர்ச்சி சம்பவத்தை 27 வயதான லீ கோல்ஸ் பார்த்துள்ளார்.

ஒரு குழந்தைக்கு தந்தையான லீ கோல்ஸ் முதலில், அது ஒரு பொம்மை என்று நினைத்துள்ளார்.

பின் லீ கோல்ஸ் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பொலிசார் தற்போது, பிறந்து சில நாட்களேயான பிஞ்சு குழந்தை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், குழந்தையின் தாயார் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

இதனிடையே, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில்,

அந்த குழந்தையானது நான்கு நாட்கள் வரை கால்வாய் தண்ணீரில் கிடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

குறித்த தாயை தேடும் பணியில் பொலிஸார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here