காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா !!

0

உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. அதுவும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.

உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாவிட்டால் உடலில் நீரிழப்பு ஏற்படும். இதன் காரணமாக நாவறட்சி, உடல் களைப்பு, தலைவலி மற்றும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

முகப்பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளை தேவையான அளவு தண்ணீரை குடிப்பது மூலம் சிகிச்சையளிக்க முடியும்.

பழச்சாறுகள் அல்லது மற்ற பானங்கள் குடிப்பது நம் உடலின் நீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது, நீங்கள் தினமும் குறைந்தது 6-8 கிளாஸ் தண்ணீரை குடிக்க வேண்டும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் அதிகம்.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் மிக எளிதாக நீங்கும், இரத்தம் சுத்தமாகும், மலச்சிக்கல் ஏற்படாது. உடல் சோர்வு உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் ஏற்படலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சோர்வை குறைக்கவும் உடல் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.

சிறுநீரக கற்களை வெளியேற்றும் திறன் தண்ணீருக்கு உள்ளது. தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு காரணமான அதிகப்படியான ரசாயனங்கள், தாதுக்கள் மற்றும் உப்புகளை தண்ணீர் நீர்த்துப்போகச் செய்கிறது, இதோடு சேர்த்து உடலில் உள்ள நச்சுக் கழிவுகளையும் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here