காலி முகத்திடல் போராட்ட களத்துக்கு இலவச 4G – 5G வசதிகள்

0

இன்று (15) முதல் 7ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G – 5G வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, போராட்ட களத்துக்கு அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை அதற்கான இணைப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14) காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், பெரிய வெள்ளியை நினைவுகூரும் வகையிலும், ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாகவும் இன்று காலி முகத்திடல் பகுதியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here