காலிமுகத்திடலில் அதிகரிக்கும் பரபரப்பு ! காளியின் திடீர் அவதாரம்

0

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று 29வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் நேற்றையதினம் இரவு ஆர்ப்பாட்டம் இடம்பெறும் காலிமுகத்திடல் கோட்டா கோ கமவிற்கு தேசிய பிக்குகள் முண்னனியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பிக்குகள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.

இதேவேளை நேற்றையதினம் கோட்டா கோ கமவில் விசேட அம்சமாக பறை அடித்து பத்திரகாளி பூஜை நடைபெற்றது.

குறித்த பூஜையில் இன மத பேதமின்றி அணைவரும் பங்கெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here