காலப்போக்கில் கொரோனா வைரஸானது காய்ச்சலை போன்று மாறிவிடும் – பேராசிரியர் சாரா!

0

கொரோனா தொற்று உலகின் கொடிய நோயாக கருதப்படுகிறது, மேலும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த கொரோனா தொற்றுநோயை ஒழிக்க உலக நாடுகளில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஒவ்வொரு தடுப்பூசியை போராடி தடுப்பூசிகளியும் கண்டுபிடித்தனர், ஆனால் அனைத்து தடுப்பூசிகளும் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை மீண்டும் இதனை அழிக்க வேண்டும் என புதிய தடுப்பூசிகளினை கண்டுபிடிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேவேளை கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்த பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் அஸ்ராஷெனிக்கா தடுப்பூசியை கண்டுபிடித்த அறிவியலாளர் கூறுகையில் இந்த கொரோனா என்ற நோயும் காலப்போக்கில் வெறும் காய்ச்சல், தடிமனைப்போல வந்து போகும் ஒரு வைரஸாக மாறிப்போகும் என தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போட் நிறுவனத் தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியரான பேராசிரியர் டமி சாரா கில்பேட் (Dame Sarah Gilbert) இனி கொரோனா வைரஸ் பயங்கரமான ஒரு திடீர் மாற்றம் பெற்ற வைரஸாக மாறாது என்றும், அது காலப்போக்கில் ஒரு சாதாரண காய்ச்சல், தடிமனைப்போல உள்ள வைரஸாக மாறிவிடும் என்றும் கூறியுள்ளார்.

பொதுவாகவே வைரஸ்கள் மக்களுக்குள் பரவும்போது தன் வீரியத்தன்மையை இழந்துவிடும் என்று கூறும் பேராசிரியர் சாரா இன்னும் பயங்கரமான ஒரு வகை ‘Sars-CoV-2’ வைரஸ் உருவாகும் என எண்ணவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.

Covid-19 ஐ உருவாக்கும் இந்த கொரோனா வைரஸ், காலப்போக்கில் காய்ச்சல் உருவாக்கும் ஒரு சாதாரண கொரோனா வைரஸாக மாறிவிடும் என்கிறார்.

நாம் ஏற்கனவே மனிதர்களை பாதிக்கும் நான்கு வெவ்வேறு வகை கொரோனா வைரஸ்களுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று கூறும் பேராசிரியர் சாரா, இந்த Sars-CoV-2 வைரஸும் அவைகளில் ஒன்றைப் போலாகிவிடும் என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை என்கிறார்.

ஒரே ஒரு விடயத்தை மட்டுமே நாம் யோசிக்க வேண்டியுள்ளது ,அது இந்த கொரோனா வைரஸானது காய்ச்சல் வைரஸாக மாறுவதற்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்பதுதான் தெரியவில்லை என்று கூறும் பேராசிரியர் சாரா, அதுவரை இந்த கொரோனாவை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம் என்றார்.

பேராசிரியர் சாரா கில்பர்ட் றோயல் மருத்துவ கழகம் வழங்கும் வெபினாரின் போது கொரோனா தொடர்பான கருத்துக்களை தெரிவித்தார்
59 வயதாகும் பேராசிரியர் சாரா, ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் Jenner நிறுவனத்தில், கொரோனாவுக்கெதிரான ஒக்ஸ்போட் அஸ்ராஷெனிக்கா தடுப்பூசியை உருவாக்கிய குழுவை தலைமையேற்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here