கார் மீது மோதி விழுந்து நொறுங்கிய விமானம்! மூவர் பலி

0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வடக்கு பெர்ரி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் விமானி உள்பட 2 பேருடன் பயணித்தது.

விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து விமான நிலையத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார்.

அதன்படி குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் விமானம் தரை இறங்கியபோது சற்றும் எதிர்பாராத வகையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விமானம் மோதியது.

இதில் கார் உருக்குலைந்து போனது. மேலும் மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் காரில் இருந்த ஒரு பெண்ணும் ஒரு சிறுவனும் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here