காருக்குள் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை…. நடந்தது என்ன…?

0

அயர்லாந்தின் டப்ளின் நகரில் ஞாயிற்றுக்கிழமை 7 மணியளவில் சாலையோரத்தில் காருடன் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்க்கப்பட்டுள்ளது.

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 9 மாதகுழந்தை காணப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தை திருடன் ஒருவன் திருடி சென்றுள்ளான்.

அதில் குழந்தை ஒன்று காரில் இருப்பதை அறிந்து, வாகனத்தை சாலையோரத்தில் கைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் 40 வயது கடந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, வீட்டுக்கு முன்னர் நிறுத்தப்பட்டிருந்த காருடன் பிள்ளைகள் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிசார் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வாகனத்தை பரிசோதிக்கையில் பச்சிளம் குழந்தை ஒன்று காணப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here