காரில் எரிந்த நிலையில் இளம் வர்த்தகர் பலி…!

0

இலங்கையில் கொழும்பு கொஹுவல, ஆசிரி மாவத்தையில் மோட்டார் வாகனத்தில் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

33 வயதுடைய இளம் வர்த்தகர் ஒருவர் மோட்டார் வாகனத்தில் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர் களுபோவில பாத்திய மாவத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் இரவு உணவு பெறுவதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த இடத்திற்கு அரச பகுப்பாய்வாளர்கள் வருகைத்தந்து சம்பவம் தொடர்பில் ஆராயவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here