காபூல் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு – 21 பேருக்கு நேர்ந்த கதி..!

0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகியுள்ளனர்.

சம்பவத்தில் 33 பேர் வரை காயமடைந்துள்ளதாக காபூல் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற்ற போதே குறித்த வெடிப்பு சம்பவம் பதிவானது.

காபூலில் அண்மைய சில நாட்களாக வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இந்த வெடிப்பு சம்பவங்களுக்கு இதுவரை எந்தவித அமைப்புக்களும் உரிமை கோரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here