காதல் மனைவிக்காக 200 அடி தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிய கணவன்!

0

வவுனியாவில் 200 அடி தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுவதாகத் தெரிவித்து உறவினர்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நேற்று (27) பிற்பகல் 3.30 மணியிலிருந்து 7 மணிவரை குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலையும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

தனது மனைவி கடத்தப்பட்ட நிலையில் வாகன இலக்கம், வந்தவர்கள் விபரம் என்பன வழங்கியும் தனது மனைவியை இதுவரை பொலிஸார் மீட்டுத் தரவில்லை எனவும், பொலிஸார் பக்கச் சார்பாகவும், அசமந்தமாகவும் செயற்படுவதாகத் தெரிவித்தும் அவர் இவ்வாறு போராட்டம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here