காதலியுடன் திருமணம்… குடும்பத்தாரால் இளைஞனுக்கு நேர்ந்த கதி!

0

இந்தியாவில் கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா சங்கபுரா கிராமத்தை சேர்ந்த அனுமேஷ் போவி( 22).

இவரும் அதே கிராமத்தில் வசித்து வரும் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்களின் காதலுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இளம்பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து காதலனிடம் கூறிய போது, அவர் வீட்டை விட்டு வெளியே வா நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இதற்கு அந்த பெண்ணும் ஒப்புக் கொள்ள வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த போது, இந்த விடயம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அவர்கள் இளம்பெண்ணுக்கு அவசரம், அவசரமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனுமேஷ் போவி வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது, மர்மகும்பல் தாக்கி கொலை. செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

அதில், காதலியை திருமணம் செய்ய முயன்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த அனுமேஷ் போவியை, இளம்பெண்ணின் குடும்பத்தினர் சிலர் கொலை செய்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளம் பெண்ணின் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here