காதலியின் பெற்றோரால் காதலனுக்க நேர்ந்த கதி…!

0

இந்தியாவில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார் (26).

இவர் அதே பகுதியை சேர்ந்த சிவ நந்தினி (22) என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு எழுந்ததால் அரவிந்த் குமார் மற்றும் சிவ நந்தினி ஆகியோர் வெளியூருக்குச் சென்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மகள் சிவ நந்தினியை காணவில்லை என கடந்த 11 ஆம் திகதி பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதன் பின், அரவிந்த்குமார் மற்றும் சிவநந்தினி ஆகியோர் 19 ஆம் திகதி காவல் நிலையம் வந்துள்ளனர்.

அப்போது காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், அரவிந்த்குமார் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோரை, பெண் வீட்டாரான சிவ நந்தினியின் தந்தை ராஜேந்திரன், அவருடைய அண்ணன் தம்பிகள் மற்றும் உறவினர் ஆகியோர் மிரட்டி, தாலியை கழற்றி காவல் நிலைய வாசலில் வீசியதாக கூறப்படுகிறது.

மேலும், சிவநந்தினியை மிரட்டி வீட்டிற்கு அழைத்து சென்ற உறவினர்கள் அரவிந்த் குமாரை அவமானப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் காதலியை பிரிந்த துக்கத்தில் இருந்த அரவிந்த்குமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அரவிந்த்குமார் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here